Blogs Black out in Chennai too…
பதிந்தவர் icarus1972us மேல் ஜூலை 17, 2006
நான் பி.எஸ்.என்.எல் அகலப்பாட்டை உபயோகிக்கிறேன். கடந்த ஒரு மணிநேரமாக, blogspot.com இலே உள்ள வலைப்பதிவுகளைப் படிக்க முடியவில்லை..
பத்ரியிடம் பேசிய போது, மதியத்திலிருந்தே,blogspot.com இலே உள்ள வலைப்பதிவுகளை access செய்ய முடியவில்லல என்று கூறுகிறார். ( அவர் உபயோகிப்பது, ஏர்டெல் அகலப்பாட்டை).
தற்காலிகமாக, http://www.pkblogs.com/ என்கிற சேவையை உபயோகிக்கலாம்.
மற்றொரு விஷயம், blogspot.com தான் தடை செய்யப்பட்டிருக்கிறதே தவிர blogger.com அல்ல. ஆகவே, வழக்கம் போல, பதிவுகளை எழுதி பிரசுரம் செய்யலாம். ஆனால், அதை வாசிக்கத்தான் முடியாது..
முதன் முறையாக ரிடீஃப்.காம் இலே இது பற்றி செய்தி வந்திருக்கிறது.
இந்த சிக்கல் தீரும் வரை, wordpress இலே,என் வலைப்பதிவுச் சேவை (?) தொடரும்
Suganthi சொன்னார்
Hey, the ban has been revoked.
http://suganthis.blogspot.com/2006/07/blog-ban-revoked.html