Prakash’s Chronicle

Just another Wordpress.com weblog

Blogs Black out in Chennai too…

Posted by icarus1972us மேல் ஜூலை 17, 2006

நான் பி.எஸ்.என்.எல் அகலப்பாட்டை உபயோகிக்கிறேன். கடந்த ஒரு மணிநேரமாக, blogspot.com இலே உள்ள வலைப்பதிவுகளைப் படிக்க முடியவில்லை..

பத்ரியிடம் பேசிய போது, மதியத்திலிருந்தே,blogspot.com இலே உள்ள வலைப்பதிவுகளை access செய்ய முடியவில்லல என்று கூறுகிறார். ( அவர் உபயோகிப்பது, ஏர்டெல் அகலப்பாட்டை). 

தற்காலிகமாக, http://www.pkblogs.com/ என்கிற சேவையை உபயோகிக்கலாம்.

மற்றொரு விஷயம், blogspot.com தான் தடை செய்யப்பட்டிருக்கிறதே தவிர  blogger.com அல்ல. ஆகவே, வழக்கம் போல, பதிவுகளை எழுதி பிரசுரம் செய்யலாம். ஆனால், அதை வாசிக்கத்தான் முடியாது..

முதன் முறையாக ரிடீஃப்.காம் இலே இது பற்றி செய்தி வந்திருக்கிறது.

இந்த சிக்கல் தீரும் வரை, wordpress இலே,என் வலைப்பதிவுச் சேவை (?) தொடரும்

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 1 மறுமொழி »

Blogspot.com ban, Next in Chennai?

Posted by icarus1972us மேல் ஜூலை 17, 2006

முந்தைய பதிவு

மும்பை, தில்லியைத் தொடர்ந்து, ஏர்டெல் இணையச் சேவை, பெங்களூரிலும், ஹைதராபாத்திலும், வலைப்பதிவுகளைத் தடை செய்திருக்கிறது. geocities.com தளமும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

சுட்டி 1, சுட்டி 2

அடுத்தது அனேகமாகச் சென்னை?

இன்னமும், அமைச்சகத்திலிருந்தோ, தொலைத் தொடர்புத் துறையிலிருந்தோ, எந்த அறிவிப்பும் வரவில்லை. தொடர்பு கொண்டு பேசுகிறவர்களுக்கும் சரியாக பதில் தர மறுக்கிறார்கள். தில்லியில் இருந்து ஷிவம்விஜ் , விடாப்பிடியாகத் தொடர்ந்து சென்று கேட்டிருக்கிறார். அரசுத்துறைக்கே உரித்தான, “எனக்குத் தெரியாது, அவரைக் கேளுங்க” என்ற ஸ்டீரியோடைப் பதில்களை எல்லாம் கடந்து, இந்தப் விஷயத்தில் பதில் சொல்ல வேண்டியவரான உயர் அதிகாரி, டாக்டர்.குல்ஷன் ராய் ( CERT-IN இயக்குனர்) அவர்களிடம் கேட்ட போது கிடைத்த பதில்,

“Somebody must have blocked some sites. What is your problem?”

சென்னையிலும் போட்டுத் தள்ளினால், எல்லாரும் முழித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

1. Right to Information Act மூலமாக, எப்படி இந்த விஷயத்தில், தகவலைப் பெறுவது என்பதற்கு ஒரு உருப்படியான வழியைச் சொல்கிறார் இவர்.

2. Bloggers Collective

3. சிலந்தி வெங்கட்ரமணியின் புதிய கருவி

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

Posted by icarus1972us மேல் ஜூலை 17, 2006

கடந்த இரண்டு நாட்களாக, இந்தியாவில், சில இணையச் சேவை நிறுவனங்கள், blogger.com, blogspot.com போன்ற வலைப்பதிவுச் சேவைகளைத் தடை செய்திருக்கின்றன. வலைப்பதிவுகளை பார்க்க முடியாமல், தன்னுடைய இணையச் சேவை வழங்கியை, தில்லியில் இருந்து வலைப்பதியும் மிருதுளா விசாரித்த போது, அரசு உத்தரவு என்று பதில் கிடைத்திருக்கிறது. இந்தத் தடையினால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இது குறித்து விரிவாக வலைப்பதிந்திருக்கிறார்கள்.

தற்போது கிடைத்திருக்கும் நிலவரப்படி, இணையச் சேவையை வழங்கும் தனியார் நிறுவனங்களான Reliance Infocom, Star Hathway, Tata Internet Services ,Exatt, Spectranet போன்றவையும், பொதுத்துறை நிறுவனமான MTNL உம் தடையை அமுல் செய்திருக்கின்றன.

பெங்களூரில் இருந்து அபிநந்தன், spectranet என்கிற் ISP ஐ, தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது, அரசிடம் இருந்து தடை செய்யக் கோரி அறிக்கை வந்தது என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

எதற்காக இந்தத் தடை என்று சற்றும் விளங்கவில்லை. அரசு, வலைப்பதிவுகளைத், இணையச் சேவை வழங்கிகள் மூலமாகத் தடை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது முதலில் ஆர்டர் போடுவது, BSNL க்காகத்தான் இருக்கும். ஆனால், பிஎஸ்என்எல் தடை செய்ய வில்லை. அல்லது, அரசு ஏதாவது குறிப்பிட்ட வலைப்பதிவைத் தடை செய்யச் சொல்லி, இவர்கள், அதி புத்திசாலித்தனமாக, ஒட்டு மொத்தமாகப் போட்டுத் தள்ளிவிட்டார்களா என்றும் புரியவில்லை. அப்படி வலைப்பதிவுகளைத் தடை செய்ய வேண்டும் என்றால், ஏன் blogger ஐ மட்டும் குறி வைக்கிறார்கள் என்று புரியவில்லை.

இது வரை, சம்மந்தப்பட்ட இணையச் சேவை வழங்கிகளிடம் இருந்தும், தொலைத் தொடர்பு அமைச்சகத்திலிருந்தும், இது தொடர்பாக எந்த அறிக்கையும் வரவில்லை என்பதால், தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

இந்தத் தடையில் பாதிக்கப்பட வலைப்பதிவராக நீங்கள் இருந்தால், வலைப்பதிவுகளைப் படிப்பது எப்படி என்று சில உருப்படியான குறிப்புக்களை அமித் அகர்வால் தருகிறார்.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »

 
Follow

Get every new post delivered to your Inbox.